கோமாவில் தாய்; இரட்டை குழந்தைகளை விற்ற தந்தை - 19 வருஷத்திற்குப் பின் அம்பலமான உண்மை!

Pregnancy Georgia
By Sumathi Jan 28, 2024 06:19 AM GMT
Report

இரட்டை சகோதரிகள், 19 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ளனர்.

இரட்டை சகோதரிகள்

ஜார்ஜியாவைச் சேர்ந்தவர் அனோ சர்டானியா21 (Ano Sartania). இவரிடம் அவரது நண்பர்கள் சில வீடியோக்களை காட்டி அவரை போலவே இருக்கும் பெண் ஒருவரை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அதுகுறித்த தேடலில் அனோ இறங்கியுள்ளார்.

இரட்டையர்களான எமி மற்றும் அனோ

அப்போது தான் அவர் பெயர் அமி க்விதா (Amy Khvitia) என்பதும் அவருக்கும் 21 வயதுதான் என்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, அவர் தனது சகோதரி என்பதும், தாங்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகள் என அறிந்துள்ளார்.

ஓரினச் சேர்க்கையால் காதலர்களாக மாறிய இரட்டை சகோதரிகள் - அதிர்ச்சி சம்பவம்

ஓரினச் சேர்க்கையால் காதலர்களாக மாறிய இரட்டை சகோதரிகள் - அதிர்ச்சி சம்பவம்

நெகிழ்ச்சி சம்பவம்

அதன்பின், விசாரித்ததில் அனோ மற்றும் அமியின் தாயார் அஷா சோனி பிரசவத்திற்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் கோமாவுக்கு சென்றுள்ளார்.

கோமாவில் தாய்; இரட்டை குழந்தைகளை விற்ற தந்தை - 19 வருஷத்திற்குப் பின் அம்பலமான உண்மை! | Twins Born Reunited After 19 Years Georgia

இந்நிலையில், அவரது கணவர் கோச்சா காக்காரியாவிடம் குழந்தைகள் இறந்துவிட்டதாக கூறி செவிலியர்கள், கருப்புச் சந்தையில் விற்றுவரச் சொல்லியிருக்கின்றனர். அவரும் விற்றுள்ளார். அதன்பின், வெவ்வேறு தம்பதிகளிடம் சில மைல் தொலைவுள்ள பகுதிகளில்தான் இருவரும் வசித்துள்ளனர்.

தொடர்ந்து, தங்களது தாய் ஜெர்மனியில் இருப்பதை அறிந்து அங்குச் சென்று இருவரும் சந்தித்துள்ளனர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.