விஜய் என் டார்லிங்; வெட்கப்பட்ட மனு பாக்கர் - சுவாரஸ்ய சம்பவம்!
விஜய் குறித்து கேள்விக்கு மனு பாக்கர் அளித்த பதில் கவனம் பெற்றுள்ளது.
மனு பாக்கர்
பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டி நடந்து முடிந்தது. இதில், துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கங்களை வென்றார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவிலும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலம் வென்றார். தற்போது இவருக்கு நாடு முழுவதும் பாராட்டு விழாக்கள் நடந்து வருகிறது. அதன்படி சென்னை நொளம்பூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் மனு பாக்கருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விஜய் டார்லிங்
அதில், வினேஷ் போகத் குறித்துப் பேசிய மனு பாக்கர், "வினேஷ் எனக்கு அக்கா போன்றவர். அவரை எப்போதும் மரியாதையுடன் தான் பார்ப்பேன். நான் அவரை எப்போதும் போராளியாகவே பார்த்துள்ளேன். பல சிரமங்களைக் கடந்து வந்தவர். அவர் இதையும் தாண்டி வருவார். இனியும் நிச்சயம் தொடர்ந்து முன்னேறுவார்" என்றுக் கூறினார்.
தொடர்ந்து நடிகர் விஜய்யை தெரியுமா என்ற கேள்விக்கு, "ஓ விஜய்யை தெரியும்.. அவர் டார்லிங்" என்று வெட்கத்துடன் பதிலளித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.