நீரஜ் சோப்ராவுடன் திருமணம்? அவர் எனக்கு அப்படித்தான்.. மெளனம் கலைத்த மனு பாகர்!
நீரஜ் சோப்ரா உடனான உறவு குறித்து மனு பாகர் மனம் திறந்துள்ளார்.
திருமண வதந்தி
பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் மனு பாகர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார். ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா.
இவர்கள் இருவரும் பேசி கொள்ளும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வதந்திகள் பரவியது.
மனு பாகர் விளக்கம்
மேலும், மனு பாகரின் தாயுடன் நீரஜ் சோப்ரா பேசிய வீடியோ வெளியானதால் ரசிகர்கள் இந்த செய்தியை உறுதியாக நம்பினர். இந்நிலையில், இதுகுறித்து மனு பாகர் வெளியிட்ட வீடியோவில், மூக வலைத்தளத்தில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.
இந்த பேச்சு எப்படி வந்தது என்றும் எனக்கு தெரியவில்லை. நீரஜ் சோப்ரா எனக்கு நல்ல நண்பர். நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது. 2018ம் ஆண்டில் இருந்து நாங்கள் இருவரும் அடிக்கடி போட்டியின் போது சந்தித்துக் கொள்வோம்.
எங்களுக்குள் பெரிய அளவில் உரையாடல்கள் நிகழ்ந்தது கிடையாது. நான் நீரஜ் சோப்ராவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்ற செய்தியில் கொஞ்சம் கூட உண்மை கிடையாது. அது வதந்தி தான் எனத் தெரிவித்துள்ளார்.