செஸ் கேண்டிடேட் பட்டம் வென்ற சிறுமி...அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

Udhayanidhi Stalin Chess Tamil nadu Social Media
By Swetha Jul 11, 2024 03:27 AM GMT
Report

செஸ் விளையாட்டில் கேண்டிடேட் பட்டம் வென்ற சிறுமிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு வாழ்த்து

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “செஸ் விளையாட்டில் மிக இளம் வயதிலேயே #FIDE 'Women Candidate Master' பட்டத்தை வென்றிருக்கிறார் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த தங்கை சர்வாணிகா.

செஸ் கேண்டிடேட் பட்டம் வென்ற சிறுமி...அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து! | Udhayanidhi Congrats The Girl Won Chess Candidate

அவருக்கு நம் மனமார்ந்த வாழ்த்துகள். 4 வயதிலிருந்தே செஸ் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வரும் சர்வாணிகா, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் பயனாளி என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி? தீவிரமாகும் பணி!

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி? தீவிரமாகும் பணி!

உதயநிதி ஸ்டாலின் 

பல்வேறு சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்துள்ள தங்கை சர்வாணிகா, இப்போது புள்ளிகளின் அடிப்படையில் இந்த புதிய சாதனையை எட்டி, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

செஸ் கேண்டிடேட் பட்டம் வென்ற சிறுமி...அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து! | Udhayanidhi Congrats The Girl Won Chess Candidate

அவர் இன்னும் பல உயரங்களை தொட நம் திராவிட மாடல் அரசு அனைத்து வகையிலும் துணை நிற்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.