உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி? தீவிரமாகும் பணி!
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் உதயநிதி
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி தலைமை அலுவலகமான அன்பகத்தில், இளைஞரணி மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் ஆலேசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தலைமை வகித்தது. இதில் வடக்கு,தெற்கு மற்றும் புதுச்சேரி இளைஞரணி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
துணை முதல்வர் பதவி?
மேலும் நீட் விலக்கு, இல்லம்தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை, கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா பணிகள், ஸ்டாலின் பிறந்த நாள் விழா, லோக்சபா தேர்தல் பணிகள், சட்டசபை தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு, மாவட்ட செயலர்கள் தேர்வில் முக்கியத்துவம் போன்றவை குறித்து ஆலோசனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இளைஞரணி நிர்வாகிகள், தேர்தல் முடிவுக்கு பின், ஓட்டுகள் குறைந்த 'பூத்' கமிட்டி வார்டுகள், அதற்கான காரணங்களையும் அறிக்கையாக தரும்படி உதயநிதி கேட்டுள்ளார்.
உதயநிதிக்கு முக்கிய துறைகளுடன் கொண்ட துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என, கட்சி தலைமையிடம் வலியுறுத்துவதற்குரிய முன் தயாரிப்பு பணிகளும், இளைஞரணி ஆய்வுக்கூட்டம் வாயிலாக துவக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.