இளம்பெண் உடலைத் துண்டு துண்டாக வெட்டி ரயில்களில் வீசிய முதியவர் - திடுக் சம்பவம்!
முதியவர் ஒருவர் இளம்பெண்ணின் உடலைத் துண்டு துண்டுகளாக்கி ரயில்களில் வீசியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
மத்தியப்பிரதேசம், இந்தூர் ரயிலில் நிர்வாண நிலையில் துண்டு துண்டாகப்பட்ட வெட்டப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அதே சமயம் உத்தராகண்ட், ரிஷிகேஷ் ரயிலில் 37 வயதான பெண்ணின் கைகள் மற்றும் கால்கள் ஒரு பையில் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், இரண்டு ரயில் பெட்டிகளில் கண்டெடுக்கப்பட்ட உடல் உறுப்புகளுக்குச் சொந்தக்காரர் ரத்லம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், பில்பாங்க் காவல் நிலையத்தில் பெண் காணவில்லை என்று அவரது உறவினர்கள் புகாரளித்திருந்தனர். தொடர் விசாரணையில், கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு அந்த பெண் உஜ்ஜைனி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மதுரா செல்வதற்காக வந்துள்ளார்.
இளம்பெண் கொலை
அவரை கமலேஷ் படேல்(60) என்பவர் சமாதானப்படுத்தி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்குத் தெரியாமல் அந்த பெண்ணுக்குத் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சட்டென மயக்கத்தில் இருந்து தெளிந்த அந்த பெண் சத்தம் போட்டுள்ளார்.
உடனே, அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கமலேஷ் படேல் கொலை செய்துள்ளார். அதன்பின், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி இந்தூர் மற்றும் ரிஷிகேஷ் ரயில்களில் போட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் கமலேஷ் படேல் கைது செய்யப்பட்டுள்ளார்.