மயக்க மருந்து; இளம்பெண் பாலியல் வன்கொடுமை - சினிமா தயாரிப்பாளரின் வெறிச்செயல்!
சினிமா தயாரிப்பாளர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
மயக்க மருந்து
சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது அலி(30). சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை கீழ் அயனம்பாக்கத்தில் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். அந்த அலுவகத்தில் கொரட்டூரை சேர்ந்த 28 வயதுடைய இளம்பெண் ஒருவர் பணி புரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அம்பத்தூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது அந்த இளம்பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், முகமது அலி தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.
சினிமா தயாரிப்பாளர்
எனக்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டார். இதில் கர்ப்பமான எனக்கு, சத்து மாத்திரைகள் எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவை கலைத்தார்.

கருக்கலைப்பு குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும், என்னை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் கேட்டும் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து, சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டீசல் விலையை லீற்றருக்கு ரூ.170ஆக அதிகரிக்க வேண்டும்! அழுத்தம் தெரிவிக்கும் தனியார் நிறுவனங்கள் IBC Tamil
எங்களை கொன்று புதைத்தவர்களிடம் நீதியை கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை : கந்தையா பாஸ்கரன் ஆணித்தரம் IBC Tamil