கும்பலாக அமர்ந்து அடவாடி; முன்பதிவு செய்யாமல் ரயிலில் அட்டூழியம் - பெண் வீடியோ வைரல்!
ரயிலில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்வதன் கொடுமை குறித்து பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
ஓகா- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்
ஓகா- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் வாரந்திர ரயில். இந்த ரயில் கேரளாவின் எர்ணாகுளத்தில் (கொச்சி) இருந்து புறப்பட்டு, திருச்சூர், கோழிக்கோடு, காசர்கோடு, மங்களூர், உடுப்பு வழியாக கோவா செல்லும்.
மேலும், மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைந்து மும்பை பக்கத்தில் போய், அதன்பின்னர், குஜராத் மாநிலத்தின் சூரத், ராஜ்கோட், அஹமதாபாத் வழியாக ஓகா செல்லும். முழுமையாக அரபிக்கடலை ஒட்டியுள்ள கொங்கன் ரயில் பாதையில் மொத்தம் 44 மணி நேரம் 5 நிமிடம் செல்லும்.
ஓகாவில் இருந்து மீண்டும் எர்ணாகுளம் திரும்பும். மொத்தம் 3.5 நாட்கள் வரை ஆகும். சுமார் 50 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பெண் குற்றச்சாட்டு
இந்நிலையில் இதில் பயணித்த பெண் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இங்கு எஸ்1 ஸ்லீப்பர் கோச்சின் முன்பதிவு செய்த பெட்டியில், முன்பதிவு செய்யாத பயணிகள் பலர் ஏறி இருக்கிறார்கள். ஜெனரல் கோச்சில் போக வேண்டிய பலர் இதில் ஏறி அமர்ந்திருக்கிறார்கள்.
TranslateMom has subtitled your video in English!
— TranslateMom (@TranslateMom) June 11, 2024
For instant translations and captions, visit our web app at https://t.co/vgpywdv6o6.
Tool created by @montakaoh. pic.twitter.com/TKGY3Ov75Y
ஐஆர்சிடிசியில் இது தொடர்பாக உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. நாங்கள் பயணிக்கும் ரயில் எண் 16337 (ஓகோ எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்). எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஜெனரல் கோட்டாவில் புக்கிங் செய்த பெட்டியில் ஏறிக்கொண்டு இறங்க மறுக்கிறார்கள்.
மொத்த ரயிலும் முன்பதிவு செய்யாத பயணிகளால் நிரம்பி வழிகிறது. யாரும் கால்களை நகர்த்தக்கூட முடியாத அளவிற்கு நிலைமை உள்ளது. இவர்கள் எப்படி உட்கார்ந்துள்ளார்கள் என்பதை பாருங்கள். கும்பலாக அமர்ந்து அடவாடி செய்து வருகிறார்கள்.
என்னவெல்லாம் பண்ண முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் சரிதானா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.