தேசிய நெடுஞ்சாலைகளில் புதிதாக பச்சை தூண்கள் - என்ன காரணம் தெரியுமா?
தேசிய நெடுஞ்சாலைகளில் பச்சை நிற சிறிய தூண்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை
தினம் தோறும் கோடிக்கணக்கான வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றன. நெடுஞ்சாலையில் செல்லும்போது சென்டர் மீடியனில் செடிகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதை நாம் பார்த்திருப்போம்.
எதிர் திசையில் வரும் வாகனங்களின் ஹெட்லைட் ஒளி இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்க உதவுகிறது என்பது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பச்சை நிற தூண்கள்
தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சென்டர் மீடியனில் செடி வைக்க முடியாத இடங்களில் ஆண்டி கிளார் ஸ்கிரீன் எனப்படும் சில பச்சை நிற சிறிய தூண் போன்ற கருவியை பொருத்தி வருகிறார்கள். இது வாகனம் அதிவேகமாக வரும் போது எதிரே வரும் வாகனத்தில் உள்ள ஹெட்லைட் தொந்தரவு செய்யாத வகையில் தடுத்து நிறுத்தும் எனக் கூறப்படுகிறது.
தற்போது இந்த ஆன்டி கிளார் ஸ்கிரீன் விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமே பொருத்தப்பட்டு வருகிறது. விரைவில், மற்ற பகுதிகளிலும் இது விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சாலையில் அந்த குறிப்பிட்ட வாகனம் செல்லும் பாதையில் ரோடு எப்படி இருக்கிறது என்பதை காட்டுவதற்காக அதன் நடுவே ஸ்டிக்கர்கள் பொருத்தப்படுகிறது.
இந்த ஸ்டிக்கர்கள் ரோடு எந்த வழியாக பயணிக்கிறது என்பதை எளிதாக ஓட்டுனருக்கு காட்டும் வகையில் ரிப்லெக்ட் செய்யும். இதனால் எதிரில் வரும் வாகன ஓட்டிகள் தொந்தரவு இல்லாமல் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.