1 கிலோ மீட்டர் சாலை தான்; 18 கோடிக்கு பதில் ரூ.250 கோடி ரூபாய் செலவு - அதிரவைக்கும் அறிக்கை

Delhi
By Sumathi Aug 15, 2023 03:44 AM GMT
Report

ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

250 கோடி செலவு

மத்திய அரசின் பாரத மாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எக்ஸ்பிரஸ் சாலை, நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் என உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

1 கிலோ மீட்டர் சாலை தான்; 18 கோடிக்கு பதில் ரூ.250 கோடி ரூபாய் செலவு - அதிரவைக்கும் அறிக்கை | Cag Flagged Multiple Irregularities In Bharatmala

இதன் மூலம், இந்தியா முழுவதிலும் உள்ள 74,942 கிலோ மீட்டர் சாலையை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 34,800 கிலோ மீட்டர் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அறிக்கை தகவல்

இதற்காக 5.35 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், டெல்லி - ஹரியானா குருகிராமை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை NH-48-ல் நெரிசலை குறைக்கும் வகையில்,

1 கிலோ மீட்டர் சாலை தான்; 18 கோடிக்கு பதில் ரூ.250 கோடி ரூபாய் செலவு - அதிரவைக்கும் அறிக்கை | Cag Flagged Multiple Irregularities In Bharatmala

புதிதாக உயர்மட்ட 8 வழி துவாரகா விரைவுச்சாலை நெடுஞ்சாலை கட்ட முடிவு செய்யப்பட்டது. ஹரியானாவில் 18.9 கிமீ நீளத்திலும், டெல்லியில் 10.1 கிமீ நீளத்திலும் ஒற்றைத் தூண்களில் விரைவுச் சாலை அமைக்க ஒப்புதல் தரப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், ஒரு கிலோ மீட்டர் சாலையை அமைக்க 18.20 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம் என அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், போலி ஆவணங்கள் மூலம் ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்காத நிறுவனங்களுக்கும் ஒப்பந்தம் தரப்பட்டுள்ளதாகவும் சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.