இதுதான் அரசின் லட்சணமா? - தேங்காய் உடைத்ததற்கே விரிசல்விட்ட சாலை

bijnor roadscam
By Petchi Avudaiappan Dec 04, 2021 05:08 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

உத்தரப்பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை திறப்பு விழாவில் தேங்காயை உடைத்தப்போது சாலை விரிசல் விழுந்ததால் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நூர் பகுதியில் 7.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு தரப்பில் ரூ.1.16 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே சாலையின்  ஒரு பகுதி நிறைவுப் பெற்று நேற்று திறப்புவிழா நடைபெற்றது.சதர் தொகுதியின் பாஜக எம்எல்ஏ சுசி சவுத்ரி இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தேங்காயை உடைத்து சாலையை திறந்து வைக்க முயன்றார். தேங்காய் சாலையில் பட்டப்போது தேங்காய்க்கு பதிலாக சாலையில் விரிசல் ஏற்பட்டு கற்கள் நாலாபுறமும் சிதறியது. 

இதனால் சுசி சவுத்ரி அதிர்ச்சியடைந்தார். பின்  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருவதற்காக அவ்விடத்திலேயே மூன்று மணிநேரம் காத்திருந்த அவர் சிதறிய பாகங்களை ஆய்வுக்கு எடுத்து சென்றப் பின்னர் புறப்பட்டு சென்றார்.

மேலும் சாலை மோசமாக அமைக்கப்பட்ட விவகாரம் குறித்து தான் மாவட்ட ஆட்சியரிடம் பேசியிருப்பதாகவும், சாலை போதுமான தரத்துடன் அமையவில்லை என்று புகார் கூறியிருப்பதாகவும், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுசி சவுத்ரி தெரிவித்தார்.