இனி FasTag தேவையில்லை - செயற்கைக்கோள் மூலம் சுங்க வரி கட்டலாம் !!அதிரடி காட்டும் இந்திய அரசு
உலகம் நவீன மயமாகி வரும் நிலையில், தடையற்ற கட்டண வசூல் முறைகளை Global Navigation Satellite System(GNSS) அடிப்படையிலான டோலிங்கை ஏற்று சுங்கக் கட்டண உள்கட்டமைப்பில் புரட்சியை ஏற்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) GNSS அடிப்படையிலான மின்னணு கட்டண வசூல் முறையை செயல்படுத்த உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கான- expressions of interest (EoIs) அழைப்பு விடுத்துள்ளது. இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனத்தால் (IHMCL) முன்னின்று நடத்தப்படும் இந்த முயற்சியானது, நெடுஞ்சாலைப் பயனாளர்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், சுங்கச்சாவடித் திறனையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட்(Business Standard) தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. தடையற்ற டோலிங், ஒட்டுமொத்த ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் தொலைதூர அடிப்படையிலான டோலிங்கை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இந்த GNSS முறையில் அடங்கும்.
இதில் பயனர்கள் நெடுஞ்சாலையில் பயணித்த தூரத்திற்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்படும். தற்போதுள்ள FASTag அமைப்பிற்குள் GNSS-அடிப்படையிலான மின்னணு டோல் சேகரிப்பு (ETC) அமைப்பை ஒருங்கிணைக்க NHAI திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில் Radio Frequency Identification (RFID) ETC உடன் இணைக்கும் முறையில் இது கொண்டுவரப்படவுள்ளது.
GNSS அடிப்படையிலான டோல் அமைப்பு, சுங்கவரி விதிக்கப்பட்ட பிரிவுகளுக்குள் வந்து வெளியேறும் வாகனங்களைக் கண்காணிக்க virtual சுங்கச்சாவடிகளைப் பயன்படுத்துகிறது. கட்டணம் விதிக்கப்பட்ட சாலை நெட்வொர்க்கில் நிறுவப்பட்ட virtual gantries GNSS'ஆல் இயக்கப்பட்ட வாகனங்களுடன் தொடர்பு கொள்கின்றன., இந்த சாதனங்கள் பதிவு எண், வங்கிக் கணக்கு விவரங்கள் உட்பட அத்தியாவசிய வாகனத் தகவலைச் சேகரிக்கின்றன.
ஒரு வாகனம் virtual சுங்கச்சாவடி வழியாகச் செல்லும்போது, கணினி தானாகவே சுங்கவரியைத் எடுக்கிறது.
GNSS அடிப்படையிலான ETC'யைப் பயன்படுத்தும் வாகனங்கள் சுமுகமாகச் செல்வதற்கு வசதியாக, சுங்கச்சாவடிகளில் பிரத்யேக GNSS பாதைகள் நிறுவப்படும். GNSS-அடிப்படையிலான ETCஐ வெற்றிகரமாக நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கு முக்கியமான, வலுவான டோல் சார்ஜர் மென்பொருளை உருவாக்க அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான நிறுவனங்களை EoI நாடுகிறது.