காசு கொடுக்கணுமா? - புல்டோசரால் சுங்க சாவடியை நொறுக்கிய ஓட்டுநர்
உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள சிஜர்சி சுங்க சாவடியை புல்டோசர் மூலம் அடித்து நொறுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சிஜர்சி சுங்க சாவடி
உத்தரபிரதேச மாநிலம் டெல்லி - லக்னோ நெடுஞ்சாலையில் உள்ள சிஜர்சி சுங்க சாவடியில் ஓட்டுநர் ஒருவர் புல்டோசர் மூலம் சுங்க சாவடியை அடித்து நொறுக்குகிறார். இதை தடுக்க முடியாத சுங்க சாவடி ஊழியர் தனது மொபைலில் அந்த காட்சிகளை வீடியோ பதிவு செய்கிறார்.
In #UttarPradesh's #Hapur, a bulldozer driver got angry when asked to pay the toll and broke through two booths at the Chhijarsi toll plaza. The employees ran away to save their lives. Currently, the bulldozer and its driver are absconding. pic.twitter.com/Y69u4cPubx
— Hate Detector ? (@HateDetectors) June 11, 2024
"கட்டணம் செலுத்த சொன்னதற்காக இரண்டு சாவடிகளையும் அடித்து நொறுக்குகிறார். ஜேசிபி எண் UP 14 KG 4255 " என வீடியோ பதிவு செய்பவர் கத்துகிறார். உடனே அந்த அங்கிருந்து புல்டோசரை ஒட்டி தப்பி சென்றார். இதில் சுங்க சாவடி ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஹாபூர் போலீஸ்
இதுகுறித்து உள்ளூர் பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து ஹாபூர் மாவட்ட போலீஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியுட்டுள்ளது.
இதில் பேசிய காவல் அதிகாரி பில்குவா "இன்று 11.06.2024 அன்று பில்குவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிஜர்சி சுங்கச்சாவடியில் உள்ள சுங்கச்சாவடியை ஜேசிபி ஓட்டுநர் ஒருவர் ஜேசிபி மூலம் சேதப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக பில்குவா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ," என்று கூறினார்.