13 மாநிலங்களை கடந்து செல்லும் ஒரே ரயில் - எந்த வழியாக தெரியுமா?
ஒரு ரயிலின் பாதை 13 மாநிலங்களை கடந்து செல்கிறது.
நவ்யுக் எக்ஸ்பிரஸ்
இந்தியாவில் 28 மாநிலங்களையும் இணைக்கும் வகையில் பெரியளவிலான ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் பாதி மாநிலங்களை கடந்து செல்லும் ரயில் ஒன்று இயங்கி வருகிறது.
கர்நாடகா, மங்களூரில் இருந்து ஜம்மு தாவி வரை இந்த ரயில் செல்கிறது. மங்களூரில் இருந்து புறப்பட்டு கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம் வழியாக ஜம்மு மற்றும் காஷ்மீரை சென்றடைகிறது.
4 நாட்கள் பயணம்
தொடர்ந்து 4 நாட்கள் பயணிக்கும் இந்த ரயில் மொத்தமாக 13 மாநிலங்களை கடக்க 68 மணி நேரம் 20 நிமிடங்கள் ஆகிறது. 12 மாநிலங்களில் மட்டும் நிற்கிறது.
இதில் ஹிமாச்சல் பிரதேசத்தில் மட்டும் நிற்காமல் செல்கிறது.
நீண்ட தூரத்திற்கு பயணம் செய்யும் ரயிலில் இந்த நவ்யுக் எக்ஸ்பிரஸ் ரயில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.