பிரிட்டிஷாருக்கு இன்றளவும் பணம் செலுத்தும் இந்திய அரசு - என்ன காரணம் தெரியுமா?
பிரிட்டிஷாருக்கு, இந்திய அரசு இன்றும் பணம் செலுத்திக்கொண்டிருக்கிறது.
சகுந்தலா ரயில்வே
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் லட்சக்கணக்கான ரயில்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பெரும்பாலான முக்கிய ரயில் சேவையை ஆங்கிலேயர்கள் போட்டிருந்தாலும் சுதந்திரத்திற்கு பின் அதனை இந்திய அரசு ஏற்றது.
இருப்பினும், ஒரு ரயில் பாதை மட்டும் இன்றும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் கீழ் தான் இருக்கிறது. மஹாராஷ்ட்டிரா, யவத்மாலுக்கும் மூர்த்திஜாபூருக்கும் இடையில் 190 கிமீ நீளமுள்ள சகுந்தலா ரயில்வே என்ற குறுகிய ரயில் பாதை உள்ளது.
1910ல் தனியார் பிரிட்டிஷ் நிறுவனம் தான் இதனை நிறுவியது. 19 ஆம் நூற்றாண்டில் தண்டவாளங்களை நிறுவிய நிறுவனம் தான் இன்னும் இந்த ரயில் பாதையை பராமரித்து வருகிறது. மேலும் இங்கு ரயில்களை இயக்குவதற்காக பிரித்தானியர்களுக்கு இந்தியா இன்னும் ஒரு கோடி ரூபாய் கட்டணத்தை செலுத்தி வருகிறது.
பிரிட்டிஷ் நிறுவனம்
தற்போது, ஒரு நாளைக்கு ஒரு சுற்றுலா ரயில் மட்டுமே இயங்கி வருகிறது. 70 ஆண்டுகள் கழித்து ஏப்ரல் 15, 1994 இல், அசல் இயந்திரத்திற்கு பதிலாக டீசல் மோட்டார் நிறுவப்பட்டது. இன்று இந்த ரயிலுக்காக டிக்கெட் விலை 150 ரூபாய். முதலில் சரக்கு ரயில் செல்லும் பாதையாக இருந்தது.
பின்னர் மக்களை ஏற்றிச் செல்ல இரயில்வே வழியாக மாற்றப்பட்டது. சிக்னலிங், டிக்கெட் விற்பனை, வண்டிகளில் இருந்து இன்ஜினைப் பிரித்தல் உள்ளிட்ட அனைத்து ரயில்வே பணிகளையும் 7 பேர் கொண்ட ஊழியர்கள் தற்போது செய்கிறார்கள்.