Sunday, May 4, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு இனி ரயிலில் இந்த இடம்தான் - ரயில்வே அதிரடி

India
By Sumathi 2 years ago
Report

மாற்றுத்திறனாளிகளின் ரயில் பயணம் எளிதாக அமைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி

ரயில் மற்றும் விரைவு ரயில்களில் மாற்றத்திறனாளிகளுக்கு கீழ்படுக்கைகளை (லோயர் பெர்த்) ஒதுக்க முன்னுரிமை வழங்க ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுடன் செல்கிற உதவியாளர்களுக்கு நடு படுக்கைகள் (மிடில் பெர்த்) ஒதுக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இனி ரயிலில் இந்த இடம்தான் - ரயில்வே அதிரடி | Lower Berth For Disabled In Trains

இது குறித்து ரயில்வே மண்டல அலுவலகங்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், "மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் சிலிப்பர் கிளாஸ்சில் (எஸ்-பெட்டி) 2 கீழ் படுக்கை மற்றும் 2 நடு படுக்கை ஒதுக்கப்பட வேண்டும்.

ரயில் சலுகை

மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் ஒரு கீழ் படுக்கை, ஒரு நடுபடுக்கையும், மூன்றடுக்கு எகனாமி ஏ.சி. பெட்டிகளில் ஒரு கீழ் படுக்கையும், ஒரு நடு படுக்கையும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு கட்டண சலுகையும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.