அழுக்கு ஆடையா இருக்கு..முதியவருக்கு அனுமதி மறுப்பு - மெட்ரோ ரயில் ஊழியர் சஸ்பண்ட்!
ரயிலில் பயணிக்க வந்த விவசாயின் ஆடை சரியாக இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அனுமதி மறுப்பு
பெங்களூரு ராஜாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிக்க விவசாயி ஒருவர் வந்துள்ளார்.
தனது பயணத்திற்கான டிக்கெட்டை பெற்ற அவர், ரயிலை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருந்தபோது அங்கு இருந்த பாதுகாப்பு மேற்பார்வையாளர் அவரை தடுத்து நிறுத்தி செக்கிங் செய்துள்ளார்.
மேலும், அழுக்கு சட்டை மற்றும் வேட்டி அணிந்தபடி தலையில் மூட்டையுடன் வந்த முதியவரை ரயில் ஏற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதை குறித்து சக பயணிகள் பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்கள் இருப்பினும் அவரை அனுமதிக்கவில்லை.
பணியிடை நீக்கம்
கன்னட மொழி தெரியாமல், டிக்கெட் இருந்தும் ரயில் ஏற முடியாமல் தயங்கி நின்ற விவசாயியை தடுத்ததால் சக பயணிகள் ஆவேசம் அடைந்தனர்.
இதனையடுத்து, மற்றொரு பயணி மேற்பார்வையாளரிடம் வாக்குவாதம் செய்ததால் இருதியாக விவசாயி ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.
இந்நிலையில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் மகேஷ்வர் ராவ், சம்பந்தப்பட்ட அந்த மெட்ரோ ரெயில் நிலைய கண்காணிப்பு மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.