மெட்ரோ ரயிலில் கண்ணாடி உடைந்து விபத்து - பயணிகள் காயம்!
மெட்ரோ ரயிலில் விபத்தில் சிக்கி 4 பயணிகள் படுக்காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ ரயில்
சென்னை மாநகராட்சியில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையத்தில் இருந்து செண்ட்ரல் வரை ஒரு வழித்தடத்திலும், விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.
மிகவும் குறைந்த நேரத்தில் விரைவாக பயணித்து வேண்டிய இடங்களுக்கு சென்று விடலாம் என்பதால் பொதுமக்களிடையே மெட்ரோ ரயில்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
மேலும், சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் அமைக்கும் தீவிர பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
4 பேர் காயம்
இந்நிலையில், கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை வந்தடைந்த ரயிலின் டிரைவர் திடீரென பிரேக் அடித்துள்ளர். அப்போது எதிர்பாராத விதமாக ரயிலில் உள்பகுதியில் இருந்த கண்ணாடி உடைந்து ரயிலுக்குள் சிதறியுள்ளது.
அந்நேரம் 4 பயணிகள் மீது கண்ணாடி உடைந்து விழுந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, காயமடைந்தவர்களை உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.