அமைச்சர் பேச்சு..மேடையில் தூங்கிய அதிகாரிகள் - சிரிப்பலையில் மாணவர்கள்!
கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போது மாணவர்கள் முன்னிலையில் மேடையிலேயே அதிகாரிகள் தூங்கிய சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் நகைப்பை ஏற்படுத்தியது.
கல்லூரி கனவு விழா
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நான் முதல்வன் கல்லூரி கனவு விழா நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கினார்.
அவருடன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர், ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர், ராமநாதபுரம் ஆட்சியர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் ராஜகண்ணப்பன்
மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், அமைச்சர் உரை நிகழ்த்திக்கொண்டிருக்க அதிகாரிகள் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்கள்.
அமைச்சர் பேசத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக கொட்டாவி விட்டு தூங்கி விழுந்தார்கள். அமைச்சர் பேசிய 10 நிமிடத்திற்குள் அதிகாரிகள் தூங்கி விழுந்தது மாணவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
சிரிப்பலை
மேடையிலிருந்த முன்னாள் தி.மு.க.மாவட்ட செயலாளர் திவாகரன், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் புல்லாணி, வருவாய் அலுவலர் காமாட்சி, மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் ஆகியோரைத் தவிர்த்து மேடையிலிருந்த பலர் தூங்கி விட்டனர்.
இதையெல்லாம் முன்னாள் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த மாணவ மாணவிகள், இதுதான் கல்லூரி கனவா இருக்குமோ,கனவு காணும் விழாவில் அதிகாரிகள் கனவு காண்கின்றார்களோ என்று கலாய்த்தபடி எழுந்துசென்றனர்.
குணமடைந்த டி.அர்.. லண்டனில் மகன்களுடன் வைரல் புகைப்படம்!