நடுவானில் விமான இன்ஜினை அணைக்க முயன்ற பைலட் - குலை நடுங்கிய பயணிகள்!
நடுவானில் விமான என்ஜினை நிறுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானி மோசச்செயல்
அமெரிக்கா, ஹாரிஸ்ன் ஏர் எம்பரர் இ 175 என்ற விமானம், வாஷிங்டனில் இருந்து சான் பிரான்சிஸ்கோ சென்றுக் கொண்டிருந்தது. அப்போது ஆப் டியூட்டி விமானி திடீரென விமானத்தின் எஞ்சினை நிறுத்த முயன்றுள்ளார்.
இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் உடனடியாக அருகே இருந்த ஓரிகான் ஏர்போர்ட்டிற்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தின் உள்ளே 80 பயணிகள் இருந்த நிலையில் பெரும் பரபரப்பு நிலவியது.
பதறிய பயணிகள்
அதன்பின், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அலாஸ்கா ஏர்லைன்ஸ், "அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானியால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காக் பிட் அருகே இருந்த நபர் எஞ்சினை நிறுத்த முயன்றார்.
இருப்பினும், விமானத்தின் கேப்டனும் முதல் அதிகாரியும் துரிதமாகச் செயல்பட்டனர். இதனால் விமானம் ஆஃப் ஆகாமல் தடுக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பாக இருந்தது. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக விமானம் தரையிறக்கப்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து, இந்த மோச செயலில் ஈடுப்பட்டதாக ஜோசப் எமர்சன்(44) என்ற விமானி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய பணிபெண் அந்த நபர் மன அழுத்தம் காரணமாக இப்படிச் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
