நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள்; 2 விமானிகளும் பலி - பகீர் சம்பவம்!
நடுவானில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான விபத்து
அமெரிக்கா, நெவாடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் தேசிய விமான கண்காட்சி நடைபெற்றது. அப்போது வீரர்கள் சாகசத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடந்த விபத்தில் இரண்டு விமானங்களை விமானிகள் தரையிறக்க முற்பட்டனர்.

அந்த நேரத்தில், இரண்டு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் 2 விமானங்களின் விமானிகளும் உயிரிழந்தனர்.
இருவர் பலி
உடனே, கண்காட்சி போட்டிகள் ரத்து செய்யப்பட்டதாக அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை, பெடரல் விமான சேவை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து, விபத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan