நடுவானில் பறந்த கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் - கொட்டிய தேள் அலறிய பெண் பயணி

Mumbai Air India
By Thahir May 06, 2023 01:38 PM GMT
Report

மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவரை நடுவானில் தேள் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் பறந்த பெண் பயணியை கொட்டிய தேள் 

மராட்டியத்தின் நாக்பூர் நகரில் இருந்து மும்பை நோக்கி ஏர் இந்தியா ஏஐ 630 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

அந்த விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவரை திடீரென நடுவானில் வைத்து தேள் ஒன்று கொட்டியுள்ளது.

Scorpion bites female passenger on plane

இதனால் வலி தாங்கமுடியாமல் அந்த பெண் பயணி அலறி துடித்துள்ளார். இதனால் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து ஏர் இந்தியா விமானத்தின் செய்தி தொடர்பாளர் பேசும் போது, விமானம் தரையிறங்கியதும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விளக்கம் அளித்த ஏர் இந்தியா 

அதன் பின்னர் அவர் வீடு திரும்பினார் என்றும் அப்போது எங்களுடைய அதிகாரிகள் அவருடம் மருத்துவமனைக்கு சென்றதாகவும் தெரிவித்தார்.

அவர் வீடு செல்லும் வரை அனைத்து வித உதவிகளையும் செய்தனர் என கூறியுள்ளார். பயணி ஒருவரை தேள் கொட்டிய சம்பவம் அரிய நிகழ்வு மற்றும் துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது என்று கூறியுள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம், பெண் பயணிக்கு நடந்த இந்த சம்பவத்திற்காகவும், அசவுகரியத்திற்காகவும் வருந்துகிறோம் என கூறியுள்ளது.