கடவுள் சொன்னாராம்..நடுவானில் திடீரென விமான கதவை திறக்க முயன்ற பெண்!
நடுவானில் பெண் பறந்துகொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடுவானில் விமானம்
அமெரிக்காவின், முன்னணி விமானம் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ். இது ஹூஸ்டனில் இருந்து ஒஹாயோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரத்திற்கு பயணித்துள்ளது. இந்த விமானம் 37,000 அடி உயரத்தில் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது,

34 வயது பெண் தனது இருக்கையில் இருந்து எழுந்து விமான குழுவினரிடம் சென்று ஜன்னலை திறந்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் இது ஆபத்தானது என்று கூறி பெண்ணை இருக்கையில் சென்று அமருமாறு தெரிவித்துள்ளனர்.
அடம்பிடித்த பெண்
அதனால் அந்த பெண் தொடர்ந்து அவசர கால வெளியேற்றம் கொண்ட இருக்கை அருகே சென்று ஜன்னலை திறக்க முயன்றுள்ளார். இதை கண்ட சக பயணிகளில் ஒருவர் பெண்ணை தடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், அந்த பெண் அவரை கடித்து ஜன்னலை திறக்க முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமான குழுவினர் பெண்ணை பிடித்து கட்டுப்படுத்தினர். அந்த பெண் தன் தலையை விமானத்தின் தரையில் மோதிக்கொண்டு, " கடவுள்தான் என்னை விமானத்தின் கதவை திறக்க சொன்னார்" எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan