நடுவானில் பறந்த விமானத்தில் காலியான பெட்ரோல் - மின்னல் வேகத்தில் உதவிய பிரான்ஸ்

Viral Video India France Flight
By Nandhini 3 மாதங்கள் முன்

நடுவானில் இந்திய ராணுவ விமானத்திற்கு பெட்ரோல் கொடுத்து பிரான்ஸ் நாட்டின் ராணுவ விமானம் உதவி செய்துள்ளது. 

காலியான பெட்ரோல்

இந்தியா - பிரான்ஸ் நாட்டுடன் நல்ல நட்புறவு கொண்டுள்ளது.

இந்நிலையில், PitchBlack2022 என்ற இராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய போர் விமானம் ஆஸ்திரேலியா நோக்கி வானில் சென்றுக்கொண்டிருந்தது.

petrol-flight-india-france-viral-video

உதவி செய்த பிரான்ஸ்

அப்போது, திடீரென்று இந்திய ராணுவ விமானத்தின் எரிபொருள் தீர்ந்து போனது. இதனையடுத்து, பிரான்ஸ் இராணுவ விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனடியாக பிரான்ஸ் ராணுவத்தின் விமானம் மின்னல் வேகத்தில் பறந்து வந்து நடுவானில் இந்திய ராணுவ விமானத்திற்கு எரிபொருள் நிரப்பி உதவி செய்தது.FR விமானத்தில் IN ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவது இதுவே முதல் முறை.

இது குறித்த வியப்பூட்டும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.