செவ்வெறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு - ஏகப்பட்ட சத்து இருக்காம்..!
செவ்வெறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
செவ்வெறும்பு
ஒடிசா, மயூர்பஞ்ச் மலைப் பகுதியில் ‘கை’ என்ற ஒரு வகை செவ்வெறும்பு பரவலாக காணப்படுகிறது. இது மரத்தின் இலைகளைக் கொண்டு கூடு நெய்து, தன் குஞ்சுகளை அதில் வளர்க்கிறது.
இந்த மலையில் வாழும் மக்கள் எறும்புகளை வைத்து துவையல் செய்து உண்கின்றனர். அதனை சந்தையில் விற்பனையும் செய்து வருகின்றனர்.
சட்னிக்கு புவிசார்
அந்த இலைகளை தனியே பிரித்துவிட்டு எறும்புகளை இஞ்சி, பூண்டு, மிளகாய், உப்பை வைத்து அரைத்து துவையல் செய்கின்றனர். இதில், புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், ஸிங்க், தாமிரம், அமினோ ஆசிட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என நம்புகின்றனர்.
மேலும். காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றிலிருந்து விடுபடவும், பசியை அதிகரிக்கவும், பார்வைத் திறனை அதிகரிக்கவும், மூட்டுவலி, வயிற்று நோய்களில் இருந்து விடுபடவும் இதனை உண்கின்றனர். மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் இதன் சூப் சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில், இந்த சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என ஒடிசா அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், தற்போது மத்திய அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.