உலகின் இந்த வினோத உணவுகள் பற்றி தெரியுமா - தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க.!
இதை எல்லாம் சாப்பிடுவாங்கலா என்று யோசிக்கிற அளவில் உலகில் சில வினோத உணவுகள் உள்ளன.
மீனின் கண்களை மட்டும் வைத்து ஜப்பான் கரைகளில் ஒரு உணவு தயாரிக்கப்படுகிறது. அதில், பூண்டு, சோயா சாஸ் மற்றும் எலுமிச்சை சேர்த்து சமைக்கப்படும். இதுதான் அந்த பகுதியின் பிரபல ஸ்னாக்ஸாக இருக்கிறது.
கம்போடியா நாட்டில் 1970 களில் மக்கள் பட்டினியால் சிலந்திகளை வறுத்து சாப்பிடத் தொடங்கினர். தற்போது இது அங்கு தனித்துவ உணவாக உள்ளது.
எறும்பு முட்டைகள் வைத்து சூப் தயாரிக்கப்படுகிறது. மிகவும் புளிப்பாகவும், சுவையாகவும் உள்ள இந்த சூப் பசியை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
கனடாவில் அதிகம் காணப்படும் மான் இனமான கடமான் மூக்கு பகுதியை மட்டும் தனியாக பிரித்து, முடிகளை அகற்றி ஜெல்லி வடிவில் சமைக்கப்படுகிறது.
இத்தாலியில் அழுகிய சீஸ் மூலம் உணவு தயாரிக்கப்படுகிறது. பூச்சிகள் இதனை சாப்பிட்டு முட்டையிடும், மலம் கழிக்கும். அதனால் தான் சீஸுக்கு தனி சுவை கிடைப்பதாக கூறப்படுகிறது. தற்போது இதை சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் இதைத் தடை செய்துள்ளது.
மெக்சிகன்கள் சோளத்தில் வளரும் ஹூட்லாகோச் என்ற ஒரு வகை பூஞ்சையைஉணவாக சுவைக்கின்றனர்.
சுறாக்களை பிடித்து அதை, குழியில் போட்டு, மணல் மற்றும் பாறைகளால் மூடி 2-3 மாதங்களுக்கு விட்டுவிடுகின்றனர். பின்னர் அதை எடுத்து பல மாதங்கள் உலர வைத்து சமைக்கின்றனர். இதனை ஹகார்ல் என்கின்றனர்.