நாள் முழுவதும் பீட்சா தான் - ஒரே மாதத்தில் அல்டிமேட்டா எடை குறைத்த இளைஞர்
ஒரு மாதம் முழுவதும் பீட்சா சாப்பிட்டு நபர் ஒருவர் உடல் எடையை குறைத்துள்ளார்.
பீட்சா
பீட்சாவில் பொதுவாக அதிக அளவு கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சோடியம் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும். இந்நிலையில், உடல் பயிற்சியாளரான ரியான் மெர்சர்(34), 30 நாள்கள் தினமும் 10 பீட்சாவை உட்கொண்டு,
ஒரு வினோதமான சவாலை எடுத்து, தினமும் அதன் முடிவுகளை ஆன்லைனில் வெளியிட்டிருந்தார். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு பீட்சா சாப்பிட்ட போதிலும் ஒரு மாதத்தில் மூன்றரை கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
உடல் எடை குறைப்பு
மேலும் அவர் தொடங்கியதை விட இப்போது அவர் இன்னும் அதிகமாக உடல்எடை குறைந்து காணப்படுவதாக கூறுகிறார். கொழுப்பு குறைக்க முயற்சிக்கும்போது, அதில் முன்னேற்றம் காண உங்களுக்கு பிடித்த உணவுகளை உண்ணாமல் கட்டுப்படுத்த வேண்டியதில்லை என்பதை நிரூபிக்க இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
அவர் அனைத்து வகை துரித உணவுகள் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுவதை கைவிட்டுள்ளார். நாள் முழுவதும் பீட்சா சாப்பிட்டாலும், அவர் இன்னும் ஜிம்மிற்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.