பீட்சா உண்பவரா நீங்க..அப்போ உஷார்..பீட்சா மாவு மீது கழிவறை சுத்தம் செய்யும் மாப் - வைரலாகும் புகைப்படம்

Bengaluru Pizza
By Thahir Aug 15, 2022 11:17 AM GMT
Report

பெங்களூருவில் உள்ள ஒரு டோமினோஸ் விற்பனை நிலையத்தில் பீட்சா மாவு மீது கழிவறை சுத்தம் செய்யும் மாப் தொங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிர்ந்து போன பீட்சா பிரியர்கள் 

பீட்சா என்ற துரித வகை உணவுகளை வாங்கி உண்போர் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தே பீட்சாக்களை ஆர்டர் செய்து உண்டு வருகின்றனர் பீட்சா பிரியர்கள்.

பீட்சா உண்பவரா நீங்க..அப்போ உஷார்..பீட்சா மாவு மீது கழிவறை சுத்தம் செய்யும் மாப் - வைரலாகும் புகைப்படம் | Toilet Cleaning Mop On Pizza Dough

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு டோமினோஸ் விற்பனை நிலையத்தில் பீட்சா மாவுகள் வைக்கப்பட்டுள்ள தட்டுக்கு மேல் கழிவறைகளை சுத்தம் செய்யும் மாப்கள் தொங்கிக் கொண்டிருந்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீட்சா உண்பவரா நீங்க..அப்போ உஷார்..பீட்சா மாவு மீது கழிவறை சுத்தம் செய்யும் மாப் - வைரலாகும் புகைப்படம் | Toilet Cleaning Mop On Pizza Dough

இதை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன்கள் தயவு செய்து வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை உண்ணுங்கள். மேலும் பீட்சா பிரியர்கள் சிலர் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.