புவிசார் குறியீடு கேட்கும் கைஎறும்பு சட்னி : காரணம் என்ன?
ஒடிசா மாநிலத்தில் ”கை எறும்பு” சட்னிக்கு புவிசார் குறியீடு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வெறும்பைக் கண்டாலே பயில்வான் கூட ஓடி விடுவார்கள் காரணம் அது கடித்தால் ஏற்படும் வலியும், வீக்கமும் தாங்க முடியாது. நெருப்பை அள்ளி அங்கே வைத்தது போல் இருக்கும். அந்த எறும்பில் சட்னி என்றால் நம்பமுடிகிறதா ? அது தான் உண்மை.
கை எறும்பு துவையல்
ஒடிசா மாநிலத்தில் தான் இப்படி ஒரு உணவு வகை இருக்கிறது. மயூர்பஞ்ச் என்ற மாநிலத்தில் உள்ள மலைப் பகுதியில் 'கை' என்ற ஒரு வகை நெசவு செவ்வெறும்பு காணப்படுகிறது.
Oecophylla smaragdina எனும் இந்த எறும்பு வகையினை இந்த மலையில் வாழும் பழங்குடி மக்கள், இந்த எறும்புகளை வைத்து துவையல் செய்து உண்கின்றனர். மேலும் இதை அருகில் உள்ள சந்தையிலும் விற்பனை செய்கின்றனர். மருத்துவ குணங்களால் சிறப்பு பெற்றது இந்த எறும்பு துவையல் என கூறப்படுகிறது.
புவிசார் குறியீடு
கை எறும்புகள் தங்கள் கூட்டின் அருகே வேறு உயிரினங்கள் வந்தால் வெட்டையாடிவிடும். இதன் காரணமாக இந்த எரும்பில் இருந்து கிடைக்கும் இரசாயனத்தை பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பில் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்த உணவின் மருத்துவ குணத்தையும் கருத்தில் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் இதன் தயாரிப்பில் மேம்பாடு கொண்டு வந்து இது புவிசார் குறியீடு வாங்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்.
தோஸ்த் படா தோஸ்த் : ஒரே குடையில் ஆறு சிறுவர்கள் .. வைரலாகும் வீடியோ