தோஸ்த் படா தோஸ்த் : ஒரே குடையில் ஆறு சிறுவர்கள் .. வைரலாகும் வீடியோ
மழைக்காலத்தில் ஒரே குடையில் ஆறு பள்ளி குழந்தைகள் நடந்து செல்லும் அழகான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெரும்பாலும் 90 ஸ் கிட்ஸ்கள் மழைக்காலத்தில் பள்ளிக்கு செல்லும் போது ஒரே குடையில் நண்பர்களுடன் செல்வார்கள். அதில் உடல் கொஞ்சம் நனைந்தாலும் நண்பர்களுடன் மழைக்காலத்தில் நடந்து செல்வது தனி சுகம் தான் .
இந்த நிலையில் மழை துறல் வரும் சமயத்தில் ஒரே குடையில் ஆறு பள்ளிக் குழந்தைகள் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் ஒரு சிறுவன் கையில் எழுத்து பலகை (சிலேட்) வைத்துள்ளான் மற்ற குழந்தைகள் குடையினை இறுக்கமாக பிடிக்க , மழை தூறலுக்கு மத்தியில் ஆனந்தமாக நடந்து செல்கின்றனர்.
‘’சாகசக்கார வந்தியத்தேவன் இதோ ‘’ பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்
ஒரு குடையில் 6 சிறுவர்கள்
இந்த வீடியோவினை (IAS) அதிகாரி அவனிஷ் ஷரன் ட்விட்டரில் ‘‘தோஸ்த்’’ என்ற கேப்ஷனோடு பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 1.1 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
दोस्त.❤️ pic.twitter.com/JvbjRurKO5
— Awanish Sharan (@AwanishSharan) July 2, 2022
நினைவுகளை அசைபோட்ட இணையவாசிகள்
இந்த வீடியோவிற்கு ட்விட்டர் வாசி ஒருவர் இது எங்களின் 90 களின் குழந்தை பருவத்தை ஞாபகப்படுத்துகிறது அப்பொதெல்லாம் மழைக்காலத்தில் சாலைகள் சேறு நிறைந்திருக்கும் அதில் நண்பர்களுடன் செல்வோம் .
ஆனால் அப்போது எங்களிடம் செருப்பு இருக்காது எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோவினை பார்த்த இணைய வாசிகள் தங்களின் பள்ளிக்கால நினைவுகளை அசைப்போடுள்ளனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.