பெட்ரூமில் கணவன் செய்த செயலால் துடித்த மனைவி - கொடூர சம்பவம்!
கணவன், நாக பாம்பை விட்டு கடிக்க வைத்து மனைவி, மகளை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை புகார்
ஒடிஷா, அதீபரா கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பத்ரா(25). இவரது மனைவி பாசந்தி. இந்தத் தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், இவரது மனைவி மகள் இருவரையும் பாம்பு கடித்துள்ளது.
தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதில் அங்கு அவர்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். பாசந்தியின் தந்தை, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாரளித்துள்ளார்.
கணவன் வெறிச்செயல்
அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் மருமகன் கணேஷ் பாத்ரா மீது சந்தேகம் இருப்பதாகவும், தனது மகள், அவர் கணவர் மீது வரதட்சணை புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தார். உடனே கணவரை விசாரிக்கையில், மனைவி வரதட்சணை புகார் கொடுத்ததால், சிவன் கோயிலில் சிவ பூஜை செய்ய நாகப் பாம்பு வேண்டும் என வாங்கி என் வீட்டிற்கு எடுத்து சென்று அதை மறைத்து வைத்தேன்.
வீட்டில் உள்ளே இருக்கும் அறையில் என் மனைவியும் மகளும் உறங்குவார்கள். நான் வெளியே இருக்கும் அறையில் உறங்குவேன். அதிகாலை 2 மணிக்கு வீட்டில் மறைத்து வைத்திருந்த பாம்பை எடுத்து, என் மனைவி தூங்கும் அறைக்குள் விட்டுவிட்டு, கதவுகளை மூடிவிட்டேன். பிறகு அதிகாலை வீட்டில் இருந்து கூச்சலிட்டேன் எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.