கடித்த பாம்பை திருப்பி கடித்து பழிவாங்கிய சிறுவன் - விசித்திர சம்பவம்!

Snake Chhattisgarh
By Sumathi Nov 02, 2022 07:29 AM GMT
Report

தன்னை கடித்த பாம்பை சிறுவன் ஒருவன் திரும்ப கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பழிவாங்கிய சிறுவன்

சத்தீஸ்கர், பந்தர்பாத் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக்(12). இவர் தனது வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென நாக பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. உடனே அந்தச் சிறுவன் நாகப்பாம்பை வளைத்துப் பிடித்து கையில் சுற்றிக் கொண்டு கடித்துள்ளார்.

கடித்த பாம்பை திருப்பி கடித்து பழிவாங்கிய சிறுவன் - விசித்திர சம்பவம்! | Boy Bites Cobra Snake To Death In Chhattisgarh

அதில் அந்த பாம்பு இறந்துள்ளது. அதனையடுத்து, அதிர்ச்சியடைந்த பெற்றோர் அந்தச் சிறுவனை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு பாம்பு விஷ முறிவு ஊசி போடப்பட்டது.

உயிரிழந்த பாம்பு

பின் நாள்முழுவதும் மருத்துவர் கண்காணிப்பில் வைத்து குணமடைந்ததாக வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து அந்த சிறுவன், பாம்பு என் கையை கடித்தது. நான் மிகுந்த வலி வேதனையில் இருந்தேன்.

பின் என்னை கடித்த அந்த பாம்பை வளைத்துப் பிடித்து கையில் சுற்றிக்கொண்டு 2 முறை கடித்தேன். இது அனைத்தும் ஒரு நொடியில் நடந்தது எனக் கூறினார். இந்தப் பகுதியில் பாம்பு கடித்தால் ஒன்றும் ஆகாது என நம்பிக்கை இருப்பது குறிப்பிடத்தக்கது.