உச்சகட்ட பதற்றத்தில் ஒடிசா.. 48 மணிநேரம் இணைய சேவை கட்- நடந்தது என்ன?
ஒடிசாவில் முகநூலில் ஒரு சர்ச்சைக்குரியபதிவிப்பட்டதை அடுத்து கலவரம் வெடித்துள்ளது.
ஒடிசா
சமீப காலமாக சமூக வலைத்தள பதிவுகளால் பல்வேறு வன்முறை வகுப்புவாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, முகநூலில் ஒரு சர்ச்சைக்குரிய பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த பதிவு மற்றொரு தரப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி கலவரம் வெடித்துள்ளது. இந்த கலவரத்திற்கு இரு காரணங்களாகக் கூறப்படுவது முகநூல் பதிவிட்ட பதிவுதான் . அதிக அளவில் பகிரப்பட்டு வைரலானது.
அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஒடிசா மாநிலத்தில் உள்ள பத்ரக் டவுன் காவல்நிலையத்தில் ஒரு தரப்பினர் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அந்தப் புகாரை எடுக்க காவல்துறையினர் மறுத்ததாகத் தெரிகிறது.
கலவரம்
இதனால் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாகவும், அப்போது அங்கு இருந்தவர்கள் காவல்துறை மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் சர்ச்சைக்குரிய பதிவு வந்ததற்குப் பிறகு ஒரு குழுவினர், பேரணி நடத்தி, சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அப்போது சாலையில் டயர்களை கொளுத்தியதாகவும் தெரிகிறது . அப்போது காவல்துறையினர் அவர்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது . ஆனால், அப்பகுதியிலிருந்த போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராடி காவல்துறை மீது கல்லெறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.
எனவே, இப்போது பத்ரக் மாவட்டம் முழுவதும் பொது ஒழுங்கை சீர்குலைத்து கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது .இந்த நிலையில் பத்ரக் மாவட்டத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்கும் வகையில் இரு தினங்களுக்கு இணையச் சேவையை நிறுத்திவைப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது