ஒடிசாவில் 1500 கிலோ தக்காளியை கொண்டு 27 அடி உயர மணல் சாண்டா... - கலைஞரின் வைரலாகும் வீடியோ
ஒடிசாவில் 1500 கிலோ தக்காளியை கொண்டு 27 அடி உயர மணல் சாண்டாவின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
27 அடி உயர மணல் சாண்டா
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஒடிசாவில் உள்ள கோபால்பூர் கடற்கரையில், மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 1500 கிலோ தக்காளியை கொண்டு 27 அடி உயர மணல் சாண்டா கிளாஸை உருவாக்கினார்.
இந்த மணல் சாண்டாவை கடற்கரைக்கு வந்தவர்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். மேலும், இந்த மணல் சாண்டா கிளாஸை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் அப்பகுதியில் குவிந்து வருகின்றனர்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், கலைஞருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.