அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு - விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடும் பூதாகரமாகியுள்ளதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கட்சியை கைபற்றும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது.
இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஓ.பி.எஸ் அணியினர் கடும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
கடந்து 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் கூட எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தும் ஓ.பி.எஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பியதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார். மேலும் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற ஆணை மீறப்பட்டுள்ளதாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் நீதிமன்ற ஆணைப்படி 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என மனுத்தாக்கல் செய்தார். பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த மனுவை விரைவில் விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
உயர்நீதிமன்றம் மறுப்பு
வரும் ஜூலை 11ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜூலை 11ல் நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!