அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!
அதிமுக பொதுக்குழுவிற்கு எந்த தடையும் விதிக்கப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 11 ஆம் தேதி நடக்க உள்ளது.
ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடும் பூதாகரமாகியுள்ளதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கட்சியை கைபற்றும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது.
இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஓ.பி.எஸ் அணியினர் கடும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
கடந்து 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் கூட எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தும் ஓ.பி.எஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பியதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார். இந்த நிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி ஆலோசனை செய்து வருகின்றனர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர்,அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டமில்லை. அரசு விதித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுக்குழுவை நடத்தலாம்.
முகக்கவசம் அணிவதில் இருந்து எந்த விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.