பெட்ரோல் டீசல் விலையினை உயர்த்தியது நாங்களா ? : அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி

By Irumporai May 23, 2022 04:57 AM GMT
Report

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு சற்று குறைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்திற்குள் குறைக்க வேண்டும். இல்லையெனில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

இது தொடர்பாக தூத்துக்குடிக்கு வந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது அவர்கள் குறைப்பது நாங்களா? என்று அனைத்து மாநிலங்களும் 

இதையும் அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். கொரோனா பரவல் தொடர்பான கேள்விக்கு அவர், இந்தியாவில் தெலுங்கானாவில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. புதிய வகை ஒமைக்ரான்  தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டது.

பெட்ரோல் டீசல் விலையினை உயர்த்தியது நாங்களா ? : அமைச்சர் மா. சுப்பிரமணியன்  கேள்வி | Raising Petrol And Diesel Prices Ma Subramaniam

இப்போது அவர் நலமுடன் இருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கூடுதலாக இல்லை. பதட்டப்பட வேண்டிய அவசியமில்லை புதியவகை தொற்று பரவவே இல்லை மேலும் தொற்று தமிழகத்தில் ஐம்பதுக்கு கீழ் தான் உள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டரை மாதத்தில் கொரோனாவிற்கு உயாிழப்பு எதுவுமில்லை சுகாதாரத் துறையில் 4ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.