மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!

M K Stalin Smt Nirmala Sitharaman Government of Tamil Nadu Government Of India
By Thahir Jun 30, 2022 02:39 AM GMT
Report

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கூட்டம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47ஆவது கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது .அதில் பல பொருட்கள் மீதான வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது .

எல்இடி விளக்குகள் , பேனா மை , கத்தி , பிளேடு உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி வரி அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது .

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..! | Cm M K Stalin Thanks Minister Nirmala Sitharaman

இந்த ஜிஎஸ்டி கூட்டத்தின் முடிவில் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெறும் என நிதியமைச்சர் அறிவித்தார்.

முன்னதாக தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டுனெ அழைப்பு விடுத்திருந்தார்.

முதலமைச்சர் நன்றி 

இந்நிலையில் மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் நடைபெறும் என்று அறிவித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ட்விட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

எங்கள் அழைப்பை ஏற்று மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்த ஒப்புக் கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு நன்றி.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு வருகை தரும் மாநில அமைச்சர்கள் மற்றும மூத்த அதகாரிகளை கோவில் நகரம் மற்றும் அதன் மக்கள் அன்புடன் வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.