நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவரின் தலையை துண்டித்து கொடூர கொலை - 144 தடை உத்தரவு அமல்..!

Government Of India Rajasthan
By Thahir Jun 29, 2022 04:12 AM GMT
Report

ராஜஸ்தானில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தவரின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவத்தால் போராட்டம் வெடித்தது.

நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து 

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டம் தன்மண்டி பகுதியில் தையல் கடை நடத்தை வருபவர் கண்ணையா லால்.

இவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்து சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாக கண்ணையா போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

ஜாமினில் வந்த பின்னர் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக கண்ணையா போலீசில் தெரிவித்துள்ளார். ஆனால், கண்ணையாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

கொடூர கொலை 

இந்நிலையில், கண்ணையாவின் தையல் கடைக்கு நேற்று மாலை ரியாஸ் அக்தரி மற்றும் ஹவூஸ் முகமது ஆகிய 2 பேர் வாடிக்கையாளர்கள் போல் வந்துள்ளனர்.

தனக்கு சட்டை தைக்க வேண்டும் என கூறியுள்ளார்.இதையடுத்து கண்ணையா அக்தரியை அளவெடுக்க ஆரம்பித்துள்ளார்.

அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணையாவை கொடூரமாக தாக்கினார். அப்போது அவருடன் வந்த ஹவூஸ் அகமது அதை வீடியோ எடுத்துள்ளார்.

நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவரின் தலையை துண்டித்து கொடூர கொலை - 144 தடை உத்தரவு அமல்..! | Nupur Sharma Supporter Murder

ரத்த வெள்ளத்தில் சரிந்த கண்ணையா தலை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து ரியாஸ் மற்றும் ஹயூஸ் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட வீடியோவை தங்கது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அவர்கள் கத்தியை காட்டி பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.இந்த நிலையில் டைலர் கண்ணையாவின் கொலை குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெடித்தது போராட்டம் 

இச்சம்பவத்தை கண்டித்து ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவரின் தலையை துண்டித்து கொடூர கொலை - 144 தடை உத்தரவு அமல்..! | Nupur Sharma Supporter Murder

இதையடுத்து பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டது. குற்றவாளிகள் ரியாஸ் மற்றும் ஹவூஸ் அகமது இருவரை போலீசார் கைது செய்தனர்.

கண்ணையா கொலை மற்றும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு குழுவினர் உதய்ப்பூருக்கு விரைந்துள்ளனர்.