தமிழகத்தை உலுக்கிய கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை : 10 பேருக்கு ஆயுள் தண்டனை
கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை
கடலூர் மாவட்டம் கண்ணகி முருகேசன் தம்பதியின் ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. கண்ணகி முருகேசன் தம்பதியின் ஆணவக்கொலை வழக்கில், கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு துக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உறவினர்கள் விடுதலை
மேலும் இந்த வழக்கில் கண்ணகியின் தந்தை துரைசாமி, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாப்புலி, ராமதாஸ், காவல் ஆய்வாளர் செல்லமுத்து, மருதுபாண்டியன் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். அதே சமயம் கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் இருந்து உறவினர்கள் ரங்கசாமி, சின்னதுரை ஆகிய இருவரை விடுவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் தமிழ் மாறனின் ஆயுள் தண்டனையை ரத்து செய்த உயர் நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது. கடலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், கண்ணகி முருகேசன் தம்பதியின் ஆணவக்கொலை வழக்கு தொடர்பாக மேல்முறையீட்டு மனு மீது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
எரித்து கொலை:
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த முருகேசன் மாற்று சமூகத்தை சேர்ந்த கண்ணகியை கடந்த 2003-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கண்ணகியின் குடும்பத்தினர் இருவரையும் விஷம் கொடுத்து எரித்து கொலை செய்தனர் . இந்த வழக்கில், கண்ணகியின் அண்ணனுக்கு தூக்கு தண்டனையும், மீதமுள்ள 12 பேருக்கு ஆயுள் தண்டனைநீதிமன்றம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. .