விஜய்க்காக பேச நான் இருக்கிறேன்..ஆனால் எனக்குப் பேசத்தான் யாரும் இல்லை -சீமான் உருக்கம்!
அரசியலில் என்னைப் பேசி, பேசி சோர்ந்து போனவர்கள் தற்போது தம்பி விஜய்யை விமர்சனம் செய்து வருவதாகச் சீமான் உருக்கம் தெரிவித்துள்ளார்.
சீமான்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் நாம் செய்த தமிழர் கட்சி சீமான்,பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,'' தமிழ்நாட்டில் உலக முதலீடுகளின் மூலம் 10 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாகவும்,
அதில் 31 லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறுவது பச்சைப் பொய் என்று கூறினார் . மேலும் இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்பேன் . அப்படி அவர்கள் கூறும் பதில் உண்மையில்லையெனில், வழக்கு தொடர்வேன் என்று கூறினார்.
விமர்சனம்
மேலும், நேர்மையாக ஆட்சி செய்யும்போது முதலீடுகள் தானாகத் தேடி வரும். இதற்கு மாறாக ஊர் ஊராகச் சென்று, முதல்வரும் பிரதமரும் முதலீடுகளை ஈர்க்கச் செல்வது தரகர் வேலை பார்ப்பதற்குச் சமமானது என்று கூறினார். தொடர்ந்து விஜய் குறித்து கடுமையான விமர்சனம் எழுப்பப்படுகிறது.
இது குறித்த செய்தியாளர் கேள்விக்கு ? அரசியலில் என்னைப் பேசி, பேசி சோர்ந்து போனவர்கள் தற்போது தம்பி விஜய்யை விமர்சனம் செய்து வருகின்றனர்.இந்த நிலையில் விஜய்க்காக பேச அவரது அண்ணன் நான் இருக்கிறேன் எனக்குப் பேசத் தான் யாரும் இல்லை சீமான் என்று கூறினார்.