அங்கீகாரம் பெற்ற நாதக - நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்த சீமான்!

Rajinikanth Naam tamilar kachchi Tamil nadu Seeman
By Jiyath Jun 09, 2024 01:15 PM GMT
Report

நடிகர் ரஜினிகாந்திற்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி மாளிகையில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் 3-வது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார்.

அங்கீகாரம் பெற்ற நாதக - நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்த சீமான்! | Ntk Seeman Thanked Actor Rajinikanth

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்கிறார். இதற்காக டெல்லி புறப்படும் முன் செய்தியாளர்களை சந்தித்த அவர் "ஜவஹர்லால் நேருக்கு பிறகு 3-வது முறையாக மோடி பதவி ஏற்கிறார், இது அவருடைய சாதனை.

நான் மட்டுமே பிரசாரம் செய்தேன்; அதிமுகவுக்கு வெற்றி தான் - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

நான் மட்டுமே பிரசாரம் செய்தேன்; அதிமுகவுக்கு வெற்றி தான் - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

சீமான் நன்றி 

இந்த முறை வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது. மாநில கட்சி அந்தஸ்து பெற்றுள்ள விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு வாழ்த்துக்கள்" என்றார். இந்நிலையில் ரஜினிகாந்திற்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

அங்கீகாரம் பெற்ற நாதக - நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்த சீமான்! | Ntk Seeman Thanked Actor Rajinikanth

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "நாடாளுமன்றத் தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.