31 நாட்களில் 133 படுகொலை.. மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு? சீமான் கேள்வி!
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தற்போது வரை 11 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. தற்போது ஆம்ஸ்ட்ராங் உடல் பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சீமான் கேள்வி
இந்நிலையில் அவரது உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து பேசிய அவர் "இப்படி ஒரு சூழல் வருமென்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன.
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை. சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. சரணடைந்தவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.