ஆம்ஸ்ட்ராங் படுகொலை: முதலமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் - எல்.முருகன்!

Bahujan Samaj Party Tamil nadu BJP Crime Death
By Jiyath Jul 06, 2024 02:34 PM GMT
Report

ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை என்பது அரசாங்கத்தின் தோல்வியை காட்டுகிறது  என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

படுகொலை 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அஞ்சலி செலுத்தினார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: முதலமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் - எல்.முருகன்! | Armstrong Assassination L Murugan Press Meet

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "பகுஜன் சாமஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமூக சேவையில் ஈடுபட்டு பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் மரணம்: ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு - உதயநிதி ஸ்டாலின்!

ஆம்ஸ்ட்ராங் மரணம்: ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு - உதயநிதி ஸ்டாலின்!

அரசாங்கத்தின் தோல்வி

ஒரு கட்சியின் மாநிலத் தலைவருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. சென்னையில் தற்போது படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை என்பது அரசாங்கத்தின் தோல்வியை காட்டுகிறது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: முதலமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் - எல்.முருகன்! | Armstrong Assassination L Murugan Press Meet

திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. சட்டம்-ஒழுங்கை கையில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கெல்லாம் முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு அரசு சட்டம் - ஒழுங்கை ஒரு துளி கூட மதிக்கவில்லை. இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.