ஆம்ஸ்ட்ராங் படுகொலை: குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் - ராகுல் காந்தி!
ஆம்ஸ்ட்ராங் கொலை அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ள நிலையில்,
அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழக அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர், மேலும் குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.