நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பதில்லை - சீமான்!

Naam tamilar kachchi Tamil nadu Seeman Viluppuram
By Jiyath Jul 08, 2024 01:02 PM GMT
Report

நான் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் மக்கள் என் பேச்சை கேட்டிருப்பார்கள் என்று நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இடைத்தேர்தல் 

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு வரும் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பதில்லை - சீமான்! | Ntk Seeman Speech In Vilupuram District

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முதல்வர் ஒவ்வொரு பணியையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார் - உதயநிதி பெருமிதம்!

முதல்வர் ஒவ்வொரு பணியையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார் - உதயநிதி பெருமிதம்!

பாதிக்கும்போது புரியும்

அப்போது பேசிய அவர் "நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை. நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டு இருப்பார்கள். 60 ஆண்டு குப்பையை, 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம்.

நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பதில்லை - சீமான்! | Ntk Seeman Speech In Vilupuram District

நான் தமிழன் என்பது தான், எனது அடையாளம். பலர் சாதியை இனம் என்று பேசி வருகின்றனர். அது தவறு. ஒரு மொழியை பேசும், குழுக்கள் தான் இனம். நான் போதிக்கும்போது உங்களுக்கு புரியாது. பாதிக்கும்போது உங்களுக்கு புரியும்" என்று தெரிவித்துள்ளார்.