விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை - ஜெயக்குமார் பேட்டி!

Tamil nadu ADMK D. Jayakumar
By Jiyath Jun 15, 2024 02:00 PM GMT
Report

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.   

இடைத்தேர்தல் 

விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை - ஜெயக்குமார் பேட்டி! | Admk Jayakumar Press Meet About Election

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஜூன் 14 தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் இறந்து விட்டேன் - அமைச்சர் நேரு பதிவில் கமெண்ட் செய்த லால்குடி திமுக எம்.எல்.ஏ

நான் இறந்து விட்டேன் - அமைச்சர் நேரு பதிவில் கமெண்ட் செய்த லால்குடி திமுக எம்.எல்.ஏ

ஜெயக்குமார் 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "ஒரு தொகுதியை புறக்கணிப்பதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. திமுக ஆட்சியில் இருக்கும்வரை இடைத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை - ஜெயக்குமார் பேட்டி! | Admk Jayakumar Press Meet About Election

பணம், படை பலத்தை கொண்டு பரிசுகளை அள்ளிக்கொடுத்து போலி வெற்றியை பெற திமுக முயற்சிக்கும். ஜனநாயக ரீதியில் இடைத்தேர்தல் நடந்தால், அதிமுகவே வெற்றி பெறும், அது நடக்காது என்பதால் தான் புறக்கணிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.