மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு கெடு - தனியார் நிறுவனம் நோட்டீஸ்!

Tirunelveli
By Sumathi Jun 13, 2024 04:56 AM GMT
Report

மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய கெடு விதிக்கப்பட்டுள்ளது.

மாஞ்சோலை தொழிலாளர்கள்

நெல்லை, அம்பாசமுத்திரத்தில் மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் 95 ஆண்டுகளாக தொழிலாளர்கள் அங்கேயே தங்கி தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர்.

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு கெடு - தனியார் நிறுவனம் நோட்டீஸ்! | Notice To Vacate The Houses Of Manjolai Workers

இங்குள்ள நிலங்கள் 99 ஆண்டுகளுக்கு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த குத்தகை காலம் 028-ம் ஆண்டுடன் முடிவடைகிறது.

முடிவுக்கு வரும் குத்தகை; தவிக்கும் மாஞ்சோலை தொழிலாளர்கள் - விருப்ப ஓய்வு பெற நோட்டீஸ்!

முடிவுக்கு வரும் குத்தகை; தவிக்கும் மாஞ்சோலை தொழிலாளர்கள் - விருப்ப ஓய்வு பெற நோட்டீஸ்!

கால அவகாசம்

எனவே, ஒப்பந்தத்தை முடித்து கொள்ளும் வகையில், அந்த நிறுவனம் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பது தொடர்பாக ஏற்கனவே 3 நோட்டீஸ்களை வழங்கியது. தற்போது 4வது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

majolai

அதில், விருப்ப ஓய்வு விண்ணப்பித்தவர்கள் தங்களது குடியிருப்புக்காக வழங்கப்பட்ட தொழிலாளர் வீடுகளை காலி செய்து இறுதி நாளின் 45 நாட்களுக்குள் அல்லது வருகிற ஆகஸ்ட் 7-ந்தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு தங்களது வீடுகளை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் 75 சதவீத கருணைத் தொகையானது விருப்ப ஓய்வு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்பட்டு அதன்படி முழு மற்றும் இறுதி ஒப்பந்தத்தில் கையொப்பம் பெறப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.