முடிவுக்கு வரும் குத்தகை; தவிக்கும் மாஞ்சோலை தொழிலாளர்கள் - விருப்ப ஓய்வு பெற நோட்டீஸ்!
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு பெற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மாஞ்சோலை தொழிலாளர்கள்
நெல்லை, அம்பாசமுத்திரத்தில் மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் 95 ஆண்டுகளாக தொழிலாளர்கள் அங்கேயே தங்கி தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர்.
இங்குள்ள நிலங்கள் 99 ஆண்டுகளுக்கு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், மாஞ்சோலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 8373 ஏக்கர் மற்றும் அம்பை பகுதியில் அமைந்துள்ள 23,000 ஏக்கரையும் காப்பு காடாக கடந்த 28.2.2018 இல் அரசிதழில் அறிவிக்கப்பட்டது.
விருப்ப ஓய்வு
தொடர்ந்து, அடுத்த மாத இறுதிக்குள் எஸ்டேட்டை காலி செய்து விட்டு அனைவரும் வெளியேற வேண்டுமென எஸ்டேட் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், குத்தகை முடிவதற்கு முன்பே அந்த தனியார் நிறுவனம் தங்களுடைய பணியை நிறுத்திக் கொள்வதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், ங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய நலனுக்காக விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை நோட்டீஸ் வாயிலாக வெளியிட்டுள்ளது. தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் வயது, அனுபவம் அடிப்படையில் விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம்.
விருப்ப ஓய்வு பெறும் பட்சத்தில் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கவும், போனஸ் மற்றும் கருணைத் தொகை மட்டுமல்லாது அனைத்து வகையான பலன்களையும் கொடுக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப ஓய்விற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 14 என்பது குறிப்பிடத்தக்கது.