எல்லோரும் தோனியாக முடியாது; அந்த வீரரை விளையாட விடுங்கள் - சவுரவ் கங்குலி!

MS Dhoni Sourav Ganguly Cricket Indian Cricket Team Sports
By Jiyath Mar 01, 2024 09:01 AM GMT
Report

எல்லோரும் எம்.எஸ்.தோணியாக முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

துருவ் ஜூரெல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

எல்லோரும் தோனியாக முடியாது; அந்த வீரரை விளையாட விடுங்கள் - சவுரவ் கங்குலி! | Not Everyone Can Be Ms Dhoni Says Ganguly

மேலும், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரில் 3-வது போட்டியில் விக்கெட் கீப்பராக அறிமுகமான துருவ் ஜூரெல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் அவர் அடுத்த எம்.எஸ். தோனியாக உருவெடுப்பார் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டினார். அதேபோல தோனி தன்னுடைய கெரியரில் எட்டிய அதே உயரத்தை துருவ் ஜூரெலும் எட்டுவார் என்று அனில் கும்ப்ளே பாராட்டியிருந்தார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் - சாதனை படைத்த நமீபியா வீரர்!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் - சாதனை படைத்த நமீபியா வீரர்!

சவுரவ் கங்குலி

இந்நிலையில் அனைவராலும் எம்.எஸ். தோனியாக முடியாது என்றும் துருவ் ஜூரெலை இப்படி ஒப்பிடாமல் முழுமையாக விளையாட விடுங்கள் என்றும் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார்.

எல்லோரும் தோனியாக முடியாது; அந்த வீரரை விளையாட விடுங்கள் - சவுரவ் கங்குலி! | Not Everyone Can Be Ms Dhoni Says Ganguly

இது தொடர்பாக அவர் பேசியதாவது, "எம்.எஸ். தோனி முற்றிலும் வித்தியாசமானவர். துருவ் ஜூரெல் நல்ல திறமையை கொண்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தோனி தோனியாக உருவெடுப்பதற்கு 20 வருடங்கள் தேவைப்பட்டன. எனவே துருவ் ஜூரெலை விளையாட விடுங்கள்.

சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவர் விளையாடும் விதம் எனக்குப் பிடித்துள்ளது. குறிப்பாக அழுத்தத்தின் கீழ் அவரைப் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவது அவசியம். அவரிடம் நல்ல பொறுமை இருக்கிறது.